Thenmardchi Vizha 2018 held in London

TDA UK organised it’s annual mega event, Thenmaradchi Vizha successfully on 15th December 2018 at Greenford Hall with full house of participants.

This year event was exclusively focused on raising fund for sponsoring economically disadvantaged A-Level Students in Thenmaradchi region. TDA UK announced that they managed to obtain fund to sponsor 71 students for 2019 academic year.

 

 

TDA UK – Invitation Message:

 

வணக்கம்,

அன்புடையீர், வரும் டிசம்பர் மாதம்  *15ம் திகதி 2018,* சனிக்கிழமை  அன்று பின்வரும் அரங்கத்தில் *தென்மராட்சி விழா- 2018,* நடாத்த தென்மராட்சி அபிவிருத்தி கழக ஐக்கிய இராச்சிய செயற்குழு  ஏகமனதாக முடிவு செய்துள்ளது என்பதை மிக்க மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.

(தென்மராட்சி விழா 2018, முன்னர் அறிவித்த திகதியும், இடமும் தென்மராட்சி மக்களில்  பலர் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள ஆர்வம் காட்டியதையிட்டு பெரும்பான்மை மக்களின் வேடுகோளிற்கிணங்க மேம்பட்ட இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது)

*Day & Date:* Saturday, 15th December 2018
*Venue:*
Greenford Hall
Ruislip Road
Greenford
UB6 9QN

சிறப்பு விடயம் என்னவென்றால் தற்போதைய *ஒஸ்லோ நோர்வே துணை நகர தலைவரான ஈழத்தின் தென்மராட்சி கைதடி பகுதியை சேர்ந்த செல்வி கம்சாஜினி குணரட்ணம்* அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

ஈழத்தின் தென்மராட்சி பகுதியை சேர்ந்த மூத்த பெரும் கலைஞரான மறைந்த நாதஸ்வர மேதை கலாநிதி *திரு எம் பஞ்சாபிகேஷன் அவர்களின் பேரன்களான நாதஸ்வர கலைஞர்கள் சித்தார்த்தன் விக்னேஸ்வரன், பிரதீதன் விக்னேஸ்வரன்* ஆகிய இருவரும் தாயகத்தில் இருந்தது வருகைதந்து இசை விருந்து நிகழ்வை வழங்கி நிகழ்வை சிறப்பிக்க இருக்கின்றார்கள். இதுதவிர கனடா, ஐரோப்பா போன்ற நாடுகளில் இருந்தும் தென்மராட்சி கழக அங்கத்தவர்கள் கலந்து இந்த நிகழ்வை சிறப்பிக்கவுள்ளார்கள்.

இதுமட்டுமல்லாமல் தென்மராட்சி பிரபல்யமான இளைய  மூத்த கலைஞர்கள் ஐரோப்பாவின் முன்னணி இசை குழுவான *RAINBOW* வுடன் இணைந்து வழங்கும் முழுநீள திரைப்பாடல் இசை, நடனம், நகைச்சுவை ஆகிய பல்சுவை அம்சங்களும் இடம்பெறவுள்ளன.

நீங்களோ அல்லது உங்கள் குழந்தைகளோ இந்த மேடை நிகழ்வில் கலந்து கொள்ளவோ அல்லது நிகழ்வுக்கு ஒத்துழைப்பு வழங்க விருப்பினால் தயவுசெய்து தாமதிக்காமல் எங்களுடன் தொடர்புகொள்ளவும்.  (Dr புவி : 07984 924502, சத்தியமூர்த்தி: 07429 145612 & சீலன்: 07958 571591)

இந்த விழா மூலம் திரட்ட படும் நிதி தாயகத்தில் தென்மராட்சி பகுதியில்  ஆக்கபூர்வமான  அத்தியாவசிய  கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு போன்ற அபிவிருத்தி திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என்பதயும் தெரிவிக்க விரும்புகின்றோம்.

இந்த விழா சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் அமைய உங்கள் அனைவரது  ஆதரவும் இன்றி அமையாதது ஒன்று ஆகும். ஆகவே இந்த வேளையில்  அனைத்து நல்லுள்ளங்களின் அன்பையும் ஆதரவையும் தென்மராட்சி அபிவிருத்தி கழகச்செயற்குழு  வேண்டி நிற்கின்றது.

இந்த நிகழ்வு பற்றிய அறிவித்தலை  அனைத்து தென்மராட்சி மக்களுடனும் பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தயவுசெய்து இந்த தினத்தை தென்மராட்சி விழா 2018 ஆக ஒதுக்கி வைக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

அனைவரும் வாரீர்! ஆதரவு தாரீர்!.

தென்மராட்சி அபிவிருத்தி கழகச்செயற்குழு – ஐக்கிய இராச்சியம்